|
நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயில் வைகாசி விழா: மே19-ல் தொடக்கம் May 16, 10 |
|
சிவகங்கை,மே 15: நாட்டரசன்கோட்டை ஸ்ரீகண்ணுடைய நாயகியம்மன் கோயில் வைகாசிப் பெருவிழா வரும் புதன்கிழமை (மே 19) கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
அன்று மாலை 4 மணிக்கு சங்காபிஷேகமும், இரவு 7 மணிக்கு காப்புக் கட்டுதலும் நடைபெற உள்ளது. மே 20 வியாழக்கிழமை முதல் முதல் மே 24 வரை தினமும் காலையில் வெள்ளிக்கேடகத்திலும், இரவில் அம்மன் பவனி வருதலும் நடைபெறும்.
மே 25 அன்று இரவு அம்மன் பல்லக்கில் வலம் வருதல், மாலையில் தங்க ரதத்தில் உள் வீதி புறப்பாடு, தொடர்ந்து அன்ன வாகனத்தில் வெளிவீதி புறப்பாடு, மே 26 அலங்கார மண்டபத்தில் காலை 9.10-க்கு எழுந்தருள்தல், இரவு 7 மணிக்கு அம்மன் வெள்ளி ரதத்தில் பவனி.
மே 27 அன்று காலை 9.15க்கு திருத்தேரில் அம்மன் பவனிவருதல், இரவு வெள்ளிக் குதிரை வாகனத்தில் பவனி, மே 28- காலை பூரண உத்சவம், இரவு வெள்ளிக்குதிரை வாகனத்தில் அம்மன் முயல் குத்தி திருநாளுடன் விழா நிறைவு பெறுகிறது.
திருவிழா நாள்களில் அம்மனுக்கு விஷேச அபிஷேகம், அலங்காரம், அர்ச்சனைகள் நடைபெறும்.
திருவிழா துவங்குவது முதல் தினமும் நாகசுவர கச்சேரியும், சமயப்பேருரைகளும், சிறப்பு இன்னிசை கச்சேரிகளும், வாணவேடிக்கைகளும் நடைபெறும்.
சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான மேலாளர் பா.இளங்கோ, ஆலய கண்காணிப்பாளர் பி.சரவணபெருமாள், கெüரவ கண்காணிப்பாளர் கே.என். ராதாகிருஷ்ணன் என்ற சின்னராதா மற்றும் கோயில் ஊழியர்கள் விழா ஏற்பாடுகளைச் செய்து வருகின்றனர்.
Source:Dinamani |
|
|
|
|
|