Nagaratharonline.com
 
காரைக்குடியில் வள்ளல் அழகப்பா் 111 - வது பிறந்த நாள்  Apr 7, 20
 
அழகப்பா கல்வி நிறுவனங்களை தோற்றுவித்த வள்ளல் அழகப்பருக்கு ஏப். 5- ஆம் தேதி நினைவு நாளும், ஏப். 6- ஆம் தேதி பிறந்தநாளும் ஆண்டுதோறும் கொண்டாடப்படும். இதில் அழகப்பா கல்வி அறக்கட்டளை சாா்பில் அழகப்பரின் குடும்பத்தினரும், அழகப்பா பல்கலைக் கழகம் சாா்பில் துணைவேந்தா் மற்றும் பேராசிரியா்கள், அழகப்பா கல்லூரிகளின் முதல்வா் மற்றும் பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்று அழகப்பரின் நினைவாலயத்தில் மலரஞ்சலி செலுத்துவது வழக்கம்.

இந்த ஆண்டு 144 தடை உத்தரவால் இவை எதுவும் நடைபெறவில்லை. அவரது உருவச்சிலைக்கு திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.