|
கானாடுகாத்தானில் தாகம் தீர்க்கும் குடிநீர் ஊரணி Aug 7, 20 |
|
கானாடுகாத்தான் பேரூராட்சி, பழையூரில் 500 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள செட்டியார் குடிநீர் ஊரணி நுாறு ஆண்டுகளை கடந்தும், கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இங்கிருந்து பழையூர் மக்கள் மட்டுமின்றி சுற்றுவட்டார கிராமத்தினர் குடிநீர் எடுத்து செல்கின்றனர்.
அக்கால கட்டத்தில் நகரத்தார் மழை நீர் சேமிக்கும் நோக்கில், வரத்து கால்வாய்களை முறையாக கட்டியுள்ளதால், இந்த ஊரணியில் மழைநீர் எளிதில் சேகரமாகும். இதனால், இப்பகுதி மக்களின் குடிநீர் தாகத்தை போக்கும் பொக்கிஷமாக செட்டியார் ஊரணி திகழ்கிறது.
பேரூராட்சி முன்னாள் தலைவர் சிதம்பரம் கூறியதாவது, மழை காலத்தில் கண்மாய்க்கு செல்லும் வரத்து கால்வாயை ஊரணிக்கு திருப்பி விட்டு நிரப்புவோம். இந்த ஊரணி நிறைந்த பின்னரே கண்மாய்க்கு திருப்பிவிடுவோம். ஏராளமான கிராம மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் ஊரணியாக நுாறு ஆண்டுக்கும் மேலாக திகழ்கிறது, என்றார். |
|
|
|
|
|