|
தீபாவளி பண்டிகை- செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரிக்கும் பணி மும்முரம் Nov 1, 20 |
|
பொதுவாக விழாக்காலம், திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்காக இந்த செட்டிநாட்டு பலகாரங்களுக்கு அதிக அளவில் ஆர்டர்கள் வந்து சேரும். இதுதவிர ஆண்டுதோறும் வரும் தீபாவளி பண்டிகையின்போதும் இந்த செட்டிநாட்டு பலகாரங்களின் தேவை அதிகரிக்கும். நொறுங்க தின்றால் நூறு வயது என்று அப்போதே நமது முன்னோர்கள் கூறியுள்ளனர். அதை உறுதிப்படுத்தும் வகையில் இங்கு தயாரிக்கப்படும் செட்டிநாடு பலகாரங்களும் அமைந்துள்ளது. அந்த அளவிற்கு இந்த பலகாரங்கள் தயாரிக்கும் முறையும் அடங்கி உள்ளது. இங்கு 5, 7 மற்றும் 9 வரிசை கொண்ட செட்டிநாட்டு தேன்குழல் முறுக்குகள், அதிரசம், மணகோலம், சீடை, தட்டை, கை முறுக்கு, பிரண்டை முறுக்கு, மாவு உருண்டை, காரா பூந்தி, மிக்சர், மைசூர்பாகு உள்ளிட்ட பலகாரங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
இந்தாண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 14-ந்தேதி கொண்டாடப்பட உள்ளது. இன்னும் ஒரு மாத காலம் மட்டும் உள்ளதால் தற்போதே இந்த செட்டிநாட்டு பலகாரங்கள் தயாரிக்கும் பணி காரைக்குடி, கோட்டையூர், பள்ளத்தூர், கொத்தமங்கலம், செட்டிநாடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் மும்முரமாக தற்போது நடைபெற்று வருகிறது. |
|
|
|
|
|