Nagaratharonline.com
 
ஜன.,1 முதல் நான்கு சக்கர வாகனங்களுக்கு பாஸ்டேக் கட்டாயம்  Nov 8, 20
 
வரும் 2021ம் ஆண்டு ஜன.,1 ம் தேதி முதல் நாடு முழுவதும் அனைத்து நான்கு சக்கர வாகனங்களும், சுங்கச்சாவடிகளை கடக்கும்போது பாஸ்டேக் அட்டை வைத்திருப்பது கட்டாயம் என மத்திய சாலைபோக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக நேற்று இரவு பிறப்பிக்கப்பட்ட உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: 2017 டிச.,1 ம் தேதிக்கு முன்பாக விற்பனை செய்யப்பட்ட எம் மற்றும் என் பிரிவு 4 சக்கர வாகனங்களுக்கு , 2021 ஜன.,1 முதல் பாஸ்டேக் அட்டை கட்டாயம். மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989ன்படி 4 சக்கர வாகன உற்பத்தியாளர்கள், டீலர்களிடம் புதிதாக 4 சக்கர வாகனங்களை பதிவு செய்யும்போதே பாஸ்டேக் எண்ணை அளிப்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 4 சக்கர வாகனங்களுக்கான தகுதிச்சான்றிதழை பெறும்போதும் கண்டிப்பாக பாஸ்டேக் வைத்திருக்க வேண்டும்.