Nagaratharonline.com
 
திருநள்ளாறு: சனிப்பெயர்ச்சியில் இருந்து 48 நாட்களுக்கு சனீஸ்வரரை தரிசனம் செய்யலாம்  Dec 22, 20
 
திருநள்ளாறில் பிரசித்தி பெற்ற சனீஸ்வரர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் சனிபகவான் தனி சன்னதி கொண்டு அருள்பாலித்து வருகிறார்.

2½ ஆண்டுகளுக்கு ஒருமுறை வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி விழா இந்த கோவிலில் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு வருகிற 27-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 5.22 மணிக்கு சனிப்பெயர்ச்சி விழா நடைபெறவுள்ளது. அதுசமயம், சனிபகவான் தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கிறார்.

பக்தர்களின் சிரமங்களை தவிர்க்க, சனிப்பெயர்ச்சி நாள் மட்டும் அல்லாது அன்றைய தேதியில் இருந்து, ஒரு மண்டலத்துக்கு (அடுத்த 48 நாட்கள்) இக்கோவிலில் சனீஸ்வரரை தரிசனம் செய்யலாம். அந்த தரிசனம் சனிப்பெயர்ச்சி அன்று கிடைக்கும் பலனை பெற்றுத்தரும்.

சனிப்பெயர்ச்சி நாள் மற்றும் அதற்கு அடுத்து வரும் ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் இலவச தரிசனம், சிறப்பு தரிசனம், கட்டண தரிசனம் செய்ய தேவஸ்தான இணையதளத்தில் (ஆன்லைன் முகவரி (www.thirunallarutemple.org) முன்பதிவு செய்வது மிக அவசியம் ஆகும்.