|
NEWS REPORT: சிங்கம்புணரியில் அகலமாகும் சாலை Jan 5, 21 |
|
கொட்டாம்பட்டி முதல் திருப்புத்துார் வரை ரூ.114 கோடி செலவில் அகலப்படுத்தும் பணி துவங்கியுள்ளது. ஏற்கனவே உள்ள சாலையை உயரப்படுத்தி, இருபுறமும் தலா ஒன்றரை மீட்டர் அகலப்படுத்தப்பட உள்ளது. நகர் புறங்களில் இருபக்கமும் 2 மீட்டர் அகல நடைபாதையும், கால்வாயும் கட்டப்பட உள்ளது.
சாலை நெடுகிலும் தென்புறத்தில் பழநி பாதயாத்திரை பக்தர்கள் நடந்து செல்ல வசதியாக 2 மீட்டர் அகலத்தில் நடைபாதை அமைக்கப்பட உள்ளது. விரைவில் இப்பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என்றும் இச்சாலையின் எஞ்சிய பகுதியான திருப்புத்துார்- காரைக்குடி பிரிவிலும் விரைவில் பணிகள் துவங்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். |
|
|
|
|
|