|
NEWS REPORT: தேவகோட்டை ராமர் கோயில் கும்பாபிஷேகம் Jul 19, 21 |
|
ராமாயண தொடர் சொற்பொழிவாளர் அரு சோமசுந்தரன், ராமாயண ராமர் கோயில் கட்டியுள்ளார். இதில் ராமர், சீதை, லட்சுமணன், பரதன் சத்ருகன் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இக்கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.திருக்கோஷ்டியூர் லட்சுமி நரசிம்ம பட்டாச்சார்யார் யாகசாலை பூஜையை தொடர்ந்து கும்பத்தில் புனித நீர் தெளித்து கும்பாபிஷேகம் செய்தார்.திருச்சி கல்யாணராமன், ஜமீன்தார் சோமநாராயணன், கல்லுாரி தலைவர் லட்சுமணன், பட்டிமன்ற பேச்சாளர் ராமநாதன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். |
|
|
|
|
|