|
ராமேசுவரம்-காசிக்கு காரைக்குடி பக்தர்கள் பாதயாத்திரை துவக்கினர் May 20, 10 |
|
இந்திய மக்களின் நலனுக்காக ராமேசுவரம் முதல் காசி வரை பக்தர்கள் பாதயாத்திரை பயணத்தை செவ்வாய்க்கிழமை ராமேசுவரத்தில் துவக்கினர்.
இந்திய மக்களின் நலனுக்காகவும், நமது கலாசாரம், பண்பாட்டைப் பேண வலியுறுத்தி வலையபட்டி கிராமத்தைச் சேர்ந்த பச்சைகாவடி(58) தலைமையில் 16 பேர் கொண்ட பக்தர்கள் ராமேசுவரத்தில் இருந்து காசிக்கு பாதயாத்திரை செல்வதற்காக செவ்வாய்க்கிழமை ராமேசுவரம் கோயிலில் தரிசனம் செய்துவிட்டு
புறப்பட்டுச் சென்றனர்.
இக் குழுவினர் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், மஹராஷ்டிரம், மத்திய பிரதேசம், உத்திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களின் வழியாக 2455 கி.மீ. தூரத்தை 122 நாள்கள் நடந்து காசி சென்றடைகின்றனர்.
இவர்கள் ஒவ்வொரு தினமும் அதிகாலை 4 மணிக்கு பாதயாத்திரை பயணத்தைத் துவக்கி 10 மணிக்கு முடித்து ஒய்வு எடுக்கின்றனர்.
இவர்கள் வெளிமாநிலம் வழியாகச் செல்லும் வழித்தடங்களில் தங்களுக்கு பாதுகாப்பு, தங்கும் வசதி செய்து கொடுக்கும்படி சம்பந்தப்பட்ட மாநில அரசுக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளதாக பாதயாத்திரைக் குழுவினர் தெரிவித்தனர்
source : Dinamani |
|
|
|
|
|