Nagaratharonline.com
 
நெற்குப்பையில் 'வெளி' மஞ்சுவிரட்டு  Dec 25, 21
 
பொங்கலுக்கு நடைபெறும் மஞ்சுவிரட்டுக்கு முன்னோட்டமாக, நெற்குப்பையில் பாரம்பரியமாக 'வெளி மஞ்சுவிரட்டு' நடத்தப்படுகிறது.

தைப் பொங்கலை அடுத்து இரண்டாவது நாளில் மாட்டுப் பொங்கலும், மஞ்சுவிரட்டும் நடைபெறுவது வழக்கம். ஒவ்வொரு பகுதியிலும் ஒவ்வொரு விதமாக கொண்டாடுகின்றனர்.நெற்குப்பை பகுதியில் மாட்டு பொங்கலன்று நடைபெறும் மஞ்சு விரட்டுக்கு இளைஞர்களையும், காளைகளையும் தயார் படுத்தும் விதமாக 'வெளி மஞ்சுவிரட்டு' பாரம்பரியமாக நடத்துகின்றனர். இதை வெள்ளோட்ட மஞ்சுவிரட்டு, இளவட்ட மஞ்சுவிரட்டு என்றும் அழைக்கின்றனர்.

மார்கழி வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் இது நடத்தப்படுகிறது. நேற்று நெற்குப்பையில் சில தொழுவிலிருந்து சில கன்றுக்குட்டிகள் அவிழ்க்கப்பட்டு காளை அவிழ்ப்பு முன்னோட்டம் சம்பிரதாயமாக நடத்தப்பட்டது.