Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா  Sep 18, 23
 
பிள்ளையார்பட்டி கற்பகவிநாயகர் கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு கொடி கோவிலை சுற்றி வந்தது. 11 மணிக்கு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு விழா தொடங்கியது. ம 18-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. முன்னதாக அன்றைய தினம் மாலை 4.30 மணி முதல் இரவு 10 மணி வரை மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கிறார். ஆண்டிற்கு ஒரு நாள் மட்டுமே இவ்வாறு மூலவர் சந்தனகாப்பு அலங்காரத்தில் காட்சியளிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. 19-ந்தேதி விநாயகர் சதுர்த்தி தினத்தன்று தீர்த்தவாரி உற்சவம் நடைபெறுகிறது. அன்றைய தினம் பகலில் மூலவருக்கு மோதகம் படையல் நிகழ்ச்சியும், இரவு 11 மணிக்கு பஞ்சமூர்த்தி சுவாமிகள் புறப்பாடும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர்கள் கண்டவராயன்பட்டி தண்ணீர்மலை செட்டியார், காரைக்குடி சாமிநாதன் செட்டியார் ஆகியோர் செய்து வருகின்றனர்.