|
மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் இலவசப் பயிற்சி முகாம் Jun 2, 10 |
|
புதுக்கோட்டை, ஜூன் 1: பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியில் விரிவுரையாளர் பணிக்கான தகுதித் தேர்வுகளுக்கு இலவசப் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இதுகுறித்து அக்கல்லூரியின் முதல்வர் தா. மணி வெளியிட்ட செய்திக்குறிப்பு:
""பல்கலைக்கழக நிதி நல்கைக்குழு உதவியுடன் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கான தகுதித் தேர்வுகளுக்குரிய பயிற்சி வகுப்புக்கள் தொடங்கப்பட்டுள்ளன. கடந்த திங்கள்கிழமை தொடங்கிய பயிற்சி முகாமில், ஸ்லெட்-நெட் தோóவுகளுக்கான பயிற்சி வகுப்பில் முதுகலை மாணவர்களும் எம்.பில்., பிஎச்.டி ஆராய்ச்சி மாணவர்களும் பங்கு பெறுகின்றனர். 15 நாள்கள் நடைபெறவுள்ள முகாமில், பல்வேறு கல்லூரிகளிலிருந்து பேராசிரியர்கள் கலந்துகொண்டு பயிற்சி அளிக்கின்றனர். பயிற்சியில் பங்குபெறும் மாணவர்களுக்குத் தோóவு தொடர்பான புத்தகங்கள் இலவசமாக வழங்கப்படும். இப்பயிற்சியில் இக்கல்லூரியில் பயின்ற மாணவர்கள் மட்டுமின்றி பிற கல்லூரி மாணவர்களும் சேர்ந்து பயன்பெறலாம். இப்பயிற்சி வகுப்பைத் தொடந்து அரசுப் பணிக்கான தோóவுகள் மற்றும் ஆசிரியர் தோóவு வாரியம் நடத்தும் தோóவுகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கும் இலவசப் பயிற்சி வகுப்புகள் நடைபெறவுள்ளன. இப்பயிற்சி வகுப்பில் தமிழ்நாடு அரசுப் பணித் தோóவு வாரியம் நடத்தும் தோóவுகளுக்கும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சி வகுப்பில் பங்குபெற விரும்புவோர் கல்லூரி அலுவலகத்தைத் தொடர்புகொள்ளலாம் (தொலைபேசி எண்கள் 04333 - 247218, 247603).''
Source:Dinamani |
|
|
|
|
|