|
மேலைச்சிவபுரி :கணேசர் கல்லூரியில் முதலாண்டு வகுப்புகள் தொடக்கம் Jul 4, 10 |
|
பொன்னமராவதி அருகேயுள்ள மேலைச்சிவபுரி கணேசர் கலை அறிவியல் கல்லூரியின் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு, சன்மார்க்க சபைச் செயலர் சித. ராமலிங்கம் தலைமை வகித்தார். பொன்புதுப்பட்டி ரோட்டரி சங்கச் செயலர் பாண்டிச்செல்வம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் தெ. திருஞானமூர்த்தி, விளையாட்டுக் குழு உறுப்பினர் விஜயரகுநாதன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். கல்லூரி முதல்வர் தா. மணி வரவேற்றார். பேராசிரியை மு. ஜெயந்தி நன்றி கூறினார்.
source : Dinamani |
|
|
|
|
|