|
புதுகை பஸ் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் Jul 15, 10 |
|
புதுக்கோட்டை, ஜூலை 13: புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் ரூ. 4 லட்சத்தில் மேம்பாட்டுப் பணிகள் செவ்வாய்க்கிழமை தொடங்கின.
புதுக்கோட்டை புதிய பஸ் நிலைய வளாகம் அடிப்படை வசதிகளற்று மோசமான நிலையில் இருக்கிறது.
இதுகுறித்து பலரும் நகராட்சி நிர்வாகத்தைக் குற்றஞ்சாட்டிவந்த நிலையில், பஸ் நிலைய வளாகத்தின் கிழக்குப் பகுதியில் இருந்த திறந்தவெளி கழிப்பிடத்தின் தரைப்பகுதியை அப்புறப்படுத்தி, ரூ. 4 லட்சம் மதிப்பீட்டில் சிமென்ட் தளம் அமைக்கும் பணிகளை நகராட்சி நிர்வாகம் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் கே. பாலகிருஷ்ணன் கூறுகையõல்,""பஸ் நிலையத்தை மேம்படுத்தத் திட்டமிட்டு பணிகள் தொடங்கியுள்ளன. முதல்கட்டமாக கிழக்குப் பகுதியில் சிமென்ட் தளம் அமைக்கப்படுகிறது. அதன் சுவர் ஓரங்களில் 2 அடி அகலத்தில் செடிகள் வளர்க்கப்படும். இதுபோல பேருந்து நிலையத்தின் ஏனைய பகுதிகளிலும் அடுத்தடுத்த கட்டமாக பணிகள் மேற்கொள்ளப்படும்'' என்றார்.
Source:Dinamani |
|
|
|
|
|