|
12 ஆண்டுகள் கழித்து திருக்கோஷ்டியூர் பெருமாளுக்கு தைலக்காப்பு உத்ஸவம் Jul 18, 10 |
|
திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாளுக்கு தைலம் சார்த்தும் நிகழ்ச்சி நடந்தது.
இங்கு, கடந்த 1999ல் தைலக்காப்பு உத்ஸவம் நடந்தது. அதன் பின் 12 ஆண்டுகள் கழித்து, இந்த உத்ஸவம் நடக்கிறது. கடந்த 11ம் தேதியன்று ஆச்சார்யர் அழைப்பு, பூர்ணாகுதியுடன் யாகசாலை பூஜை துவங்கின.
நான்கு நாட்களாக யாகசாலை பூஜை நடந்தது. நேற்று முன்தினம் காலை பாத்திரத்தில் வைக்கப்பட்ட தைலம் திருவீதி உலா வந்தது. மாலை மூலவருக்கு தைலக்காப்பு சார்த்தினர். நேற்று காலை கடம் புறப்பாடு, மதியம் பெரிய திருப்பாவாடை நடந்தது. 354 படி அரிசியால் சாதம் வடித்து பெருமாளுக்கு படைக்கப்பட்டது. இரவு 7 மணிக்கு தங்க கருட வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது.
source : Dinamalar |
|
|
|
|
|