Nagaratharonline.com
 
காரைக்குடி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் பால் குட விழா  Jul 26, 10
 
காரைக்குடி, ஜூலை 20: சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் மீனாட்சிபுரம் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில், சுற்று வட்டாரப் பகுதியைச் சேர்ந்த நகரத்தார்கள் சார்பில், செவ்வாய்க்கிழமை பால்குடம், காவடி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்கள் செலுத்தப்பட்டன.

நகரத்தார்கள் சார்பாக ஆண்டுதோறும் ஆடி மாதம் முதல் செவ்வாய்க்கிழமை பால் குடம், காவடி நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு, காரைக்குடி நகர சிவன் கோயில் நடப்பு நிர்வாக அறங்காவலர்கள், நகரத்தார் இளைஞர் நற்பணி மன்றம் ஆகியோர் சார்பில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

14-வது ஆண்டாக நடைபெற்று வரும் இந்நிகழ்ச்சியையொட்டி, காலை 8 மணியளவில் முத்தாலம்மன் கோயில் ஊருணியில் நகரத்தார்கள் கூடி, பின்னர் அங்கிருந்து 501 பேர் பால்குடமும், 16 úóபர் தீச்சட்டியும், 3 பேர் காவடியும் எடுத்து வந்தனர். இவர்கள், மாசி-பங்குனித் திருவிழா பால்குட வீதி வழியே கோயிலை வந்தடைந்தனர். பின்னர் அங்கு, பூக்குழி இறங்குதல் உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்கள் செலுத்தப்பட்டன. தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றன. இதில், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Source:Dinamani