Nagaratharonline.com
 
ஹெச்-1பி, எல்1 விசா கட்டண உயர்வு அமல் செய்யப்பட்டது  Aug 20, 10
 
இந்திய ஐ.டி.நிறுவனங்களுக்கு 250மில்லியன் அமெரிக்க டாலர்கள் கூடுதலாக செலவழியும் ஹெச்-1பி மற்றும் எல்1 விசாக் கட்டண உயர்வு ஆகஸ்ட் 14ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய நிறுவனங்களுக்கு எதிராக இந்த மசோதா நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது என்று இந்திய நிறுவனங்கள் எதிர்ப்புத் தெரிவித்தும் இது நடைமுறைக்கு வந்துள்ளது.

ஆனால் இந்த எல்லைப்பாதுகாப்பு மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ள இந்த விசாக் கட்டண உயர்வு அமெரிக்க-மெக்சிகோ எல்லைப் பாதுகாப்பு கருதியே செய்யப்பட்டுள்ளது என்று அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா ஏற்கனவே தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் ஹெச்-1பி விசா மனுக்களுக்கு 2,000 அமெரிக்க டாலர்கள் கூடுதலாக வசூலிக்கப்படும். அதே போல் சில எல்-1ஏ மற்றும் எல்-1பி விசா மனுக்களுக்கு 2,250 அமெரிக்க டாலர்கள் கூடுதலாக செலவழியும்.

இந்த புதிய விசாக் கட்டண உயர்வால் இந்திய ஐ.டி. நிறுவனங்களான இன்ஃபோசிஸ், டாடா, சத்யம், விப்ரோ ஆகிய நிறுவனங்கள்: பாதிப்படைந்துள்ளன.


source : webdunia