Nagaratharonline.com
 
காரைக்குடி : குடிமை பொருள் தாசில்தார் முருகேசன் கூறியதாவது: ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்  Aug 24, 10
 
சிவகங்கை : "ஹெவி லைசென்ஸ்' புதுப்பிக்க, டிரைவிங் பள்ளிகளின் சான்று ஏற்றுக்கொள்ளப்படாது என அரசு உத்தரவிட்டுள்ளது.


தமிழகத்தில் 1,263 டிரைவிங் பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என அரசு, கிடுக்கிப்பிடி உத்தரவிட்டது. இதை மறுபரிசீலனை செய்ய டிரைவிங் பள்ளிகள் வலியுறுத்தின. இதை ஏற்றுக்கொள்ளாத நிலையில், மேலும் சில கெடுபிடிகளை, அரசு விதித்துள்ளது.


சிக்கல், விரக்தி: கனரக வாகன லைசென்ஸ் (ஹெவி) புதுப்பிக்க, டிரைவிங் பள்ளிகளில் ஒரு நாள் பயிற்சி பெற வேண்டும். புதுப்பிக்கும் விண்ணப்பத்துடன், டிரைவிங் பள்ளியின் சான்று இணைக்க வேண்டும். இதற்கு 500 ரூபாய் முதல் 1,000 வரை டிரைவிங் பள்ளிகள் வசூலித்தன. அரசின் புதிய உத்தரவில், டிரைவிங் பள்ளிகளின் சான்று தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பதில், போக்குவரத்து கழக பயிற்சி பள்ளியின் சான்று மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இதற்கு கட்டணமாக 250 ரூபாய் பெற வேண்டும் என, போக்குவரத்து கழக பயிற்சி பள்ளிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு, டிரைவிங் பள்ளி உரிமையாளர்களை விரக்தியில் ஆழ்த்தியுள்ளது.

Sorce: Dinamalar 24th aug, 2010