|
அரசு பஸ்கள் சுத்தமின்றி துர்நாற்றம் நீண்ட தூரம் செல்லமுடியாமல் அவதி Aug 29, 10 |
|
சிவகங்கை மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு செல்லும் அரசு பஸ்களை தினமும் சுத்தம் செய்யாமல், கழிவு பொருட்களுடன் இயக்குவதால், பயணிகள் துர்நாற்றத்தால் அவதிக்குள் ளாகின்றனர். காரைக்குடி அரசு போக்குவரத்து கழக கோட்டத்தில் இருந்து, சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை, திருப்புத்தூர் கிளைகளில் இருந்து நூற்றுக்கணக்கான பஸ்கள் புறநகர், டவுன் பஸ்களாக இயக்கப்படுகின்றன. இவை அனைத்தும் பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இயங்குகிறது. புறநகர் பஸ்கள் மட்டுமின்றி டவுன் பஸ்களில் செல்லும் பயணிகள் கழிவு பொருட்களை போடுகின்றனர். அவற்றை தினமும் போக்குவரத்து கழக ஊழியர்கள் சுத்தம் செய்வதில்லை. பஸ் பக்கவாட்டு கண்ணாடிகளை சுத்தம் செய்யாததால், மணல் படிந்து காணப்படும். பயணிகள் இருக்கைகளும் இதே நிலையில் தான் உள்ளன. இதனால், "டிப்டாப்பாக' பஸ்சில் ஏறும் பயணிகள், இறங்கும்போது அழுக்கு படிந்த ஆடைகளுடன் தான் செல்லவேண்டியுள்ளது. இது தவிர கழிவு பொருட்களை கொட்டுவதால், துர்நாற்றம் ஏற்பட்டு, நோய்பரவும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது.
ஓட்டை உடைசல் பஸ்: பஸ்களின் மேற்கூரை பேரிச்சம்பழத்திற்கு கூட போடமுடியாத வகையில், ஓட்டை உடைசலாக காணப்படுகிறது. இதனால், மழைக்காலங்களில் பஸ்சிற் குள் மழை நீர் புகுந்து விடுகிறது. இதனால், பயணிகள் நிம்மதியாக பயணிக்க முடியவில்லை. அரசு பஸ்களின் இந்த அவல நிலையாலும், ஆமை வேகத்தில் செல்லும் பஸ் களால், அவசர காலத்தில் வாழும் பயணிகள் தனியார் பஸ்களை நாடிச்செல்கின்றனர். இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது போன்ற பிரச்னைகளை தீர்த்து, அரசு பஸ்களை பயணிகள் நாடிவரும் நிலைக்கு பஸ்களை மேம் படுத்தவேண்டும். அப்போது தான் அரசுக்கு வருவாயும் அதிகரிக்கும். இது குறித்து காரைக்குடி அரசு போக்குவரத்து கழக பொது மேலாளர் பசுபதி கூறுகையில், "" பஸ்களை சுத்தமாக பராமரிக்க, கிளை மேலாளர்களுக்கென நடந்த ஆய்வு கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளேன்,'' என்றார்.
source : Dinamalar |
|
|
|
|
|