Nagaratharonline.com
 
காரைக்குடியில் தலைமை அஞ்சல் நிலைய புதிய கட்டடம்: ப.சிதம்பரம் திறந்து வைத்தார்  Aug 30, 10
 
காரைக்குடி,ஆக.29: காரைக்குடியில் தலைமை அஞ்சல் நிலைய புதிய கட்டடத் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

புதிய கட்டடத்தைத் திறந்துவைத்தும், கிராமிய அஞ்சல் காப்பீட்டுப் பத்திரங்களை வழங்கியும் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பேசியது:

காரைக்குடியில் | 1 கோடி செலவில் புதிய தலைமை அஞ்சல் நிலையத்துக்கு சொந்தக் கட்டடம் கட்டப்பட்டிருக்கிறது. அஞ்சல் அலுவலகங்களில் எளிய மக்களும் சேமிப்புக் கணக்குத் தொடங்கலாம் என்றார்.

விழாவில், காரைக்குடி சட்டப் பேரவை உறுப்பினர் என்.சுந்தரம், காரைக்குடி நகர்மன்றத் தலைவர் எஸ்.முத்துத்துரை ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சிவகங்கை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் குழந்தைசாமி, காரைக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் கிருஷ்ணபெருமாள், அஞ்சல் துறை ஊழியர் சங்க செயலர் ஆ.ஜெகந்நாதன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக தமிழக வட்ட அஞ்சல் துறைத் தலைவர் சாந்திநாயர் வரவேற்றார். தெற்குமண்டல அஞ்சல்துறைத் தலைவர் பா.செல்வகுமார் நன்றி கூறினார்.

Source:Dinamani