Nagaratharonline.com
 
பிள்ளையார்பட்டியில் நலத் திட்டப் பணிகள் துவக்கம்  Sep 12, 10
 
திருப்பத்தூர்,செப்.9: பிள்ளையார்பட்டியில் பல்வேறு நலத்திட்டப் பணிகளைஅமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார்.

பிள்ளையார்பட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுலாத் துறை சார்பாக சன்னதித் தெருவில் | 30 லட்சம் செலவில் அமைக்கப்பட்டிருந்த பூ கல் சாலையைத் திறந்து வைத்து அமைச்சர் கூறியதாவது:

தமிழக அரசு கடந்த நான்கரை ஆண்டுகளில் கோயில் திருப்பணிகளுக்கென | 450 கோடியில் நாலாயிரத்து ஐந்நூறு கோயில்களுக்கு குடமுழக்கு நடத்தியுள்ளது. மேலும் கோயிலின் சுற்றுப்புறச்சூழல், வாகன வசதி, தண்ணீர் வசதி ஆகியவைகளை திறம்படச் செய்துவருகிறது. அரசுக்குச் சொந்தமான கோயில் நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளது. அதே போல் பிள்ளையார்பட்டியில் பல்வேறு நலத்திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

கோயில் சார்பாக அன்னதான மண்டபம், யாகசாலை மண்டபம், கோயிலின் கருவறையின் எதிரே பக்தர்களின் வசதிக்காக குளிர்சாதன வசதி, சுத்திகரிக்கப்பட்ட தூய குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் அவருடன் பிள்ளையார்பட்டி அறங்காவலர்கள் அருணாச்சலம் செட்டியார், சிதம்பரம் செட்டியார், பிள்ளையார்பட்டி தலைமைச் சிவாச்சாரியார் பிச்சைக்குருக்கள், பிள்ளையார்பட்டி ஊராட்சித் தலைவர் வெள்ளைச்சாமி, நகர் தி.மு.க. துணைச் செயலர் சுப்பிரமணியன், காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் அபிமன்யு ஆகியோர் கலந்து கொண்டனர்.

Source:Dinamani