Nagaratharonline.com
 
மதகுபட்டியில் கழிவுகளால் தொற்று நோய் அபாயம்  Sep 13, 10
 
மதகுபட்டி பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் கழிவுகளை கொட்டுவதால், அப்பகுதியினருக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது.மதகுபட்டியை சுற்றி 50க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள். மதுரையிலிருந்து வரும் பயணிகள் பட்டமங்கலம், நாட்டரசன்கோட்டை, குன்றக்குடி செல்ல இங்கு இறங்கி தான் பஸ் மாறி செல்லவேண்டும். இதனால், மதகுபட்டி பஸ் ஸ்டாண்ட் கூட்ட நெரிசல் நிறைந்த நகராக காணப்படும்.



கழிவுகள்: பஸ் ஸ்டான்டை சுற்றியுள்ள இறைச்சி கடை, ஓட்டல்களில் சேகரமாகும் கழிவுகளை பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் கொட்டுகின்றனர். இக்கழிவுகளில் மழை நீர் தேங்கி சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. இக்கழிவுகளில் இருந்து உருவாகும் கொசுக்களின் மூலம் தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. பஸ் ஸ்டாண்டை சுத்தமாக வைக்க ஊராட்சி நிர்வாகம் முன்வரவேண்டும்.



source : Dinamalar