|
ஏரியூர் : மூலிகை மணம் வீசும் மலை மருந்தீஸ்வரர் கோயில் Oct 14, 10 |
|
சிவகங்கையில் இருந்து 23 கி.மீ., தூரத்தில் உள்ளது ஏரியூர். இங்குள்ள மலை மருந்தீஸ்வரர், முனிநாதர் கோயில் பிரசித்தி பெற்றது. மலையை சுற்றி அரிய மூலிகைகள் இருப்பதால், மருந்தீஸ்வரர் என பெயர் வந்ததாக கூறுகின்றனர். இதன் வரலாறு குறித்து பல கருத்துக்கள் உண்டு. அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி செல்லும் போது, அதில் இருந்து விழுந்த சிறு துண்டு தான் இந்த மலை என்றும்; பார்வையற்ற ஒருவர், சுயம்பாக இருந்த மருந்தீஸ்வரரை மிதித்து விட்டதாகவும், அந்த இடத்தில் இருந்து ரத்தம் வழிந்ததாகவும், மிதித்தது இறைவன் என தெரிந்து வருந்திய அவருக்கு, சுவாமி காட்சி கொடுத்து, பார்வை அளித்ததாகவும் கூறுகின்றனர்.
source : Dinamalar |
|
|
|
|
|