Nagaratharonline.com
 
பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை ரயில்வே மேம்பாலம் நாளை திறப்பு  Oct 27, 10
 
பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலை ரயில்வே மேம்பாலத்தை நாளை, துணை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார்

இப்பாலம் பயன்பாட்டிற்கு வரும் பட்சத்தில், தாம்பரத்தில் இருந்து ஜி.எஸ்.டி., சாலையில் வரும் வாகனங்கள் ரேடியல் சாலைக்கு செல்ல பாலத்தின் மீது ஏறி, வலது புறமாக திரும்பிச் செல்ல வேண்டும். ரேடியல் சாலையில் இருந்து ஜி.எஸ்.டி., சாலையில் கிண்டி நோக்கி செல்ல, பாலத்தில் ஏறி, வலதுபுறமாக திரும்பிச் செல்ல வேண்டும். இதற்கான அறிவிப்பு பலகைகள் பாலத்தின் மீது வைக்கப்படும் என்றும், ரோட்டரியில் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க ரப்பர் வேகத்தடை அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

source : Dinamalar