Nagaratharonline.com
 
தீபாவளிக்கு 5 படங்கள் ரிலீஸ்  Oct 31, 10
 
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு "உத்தமபுத்திரன்', "மைனா' உள்பட 5 படங்கள் திரைக்கு வருகின்றன.

"எந்திரன்' படம் வெளியாகி ஒரு மாதம் ஆன நிலையில் பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள படங்கள் தீபாவளிக்கு ரிலீசாகின்றன.

இந்த முறையும் அரசியல் பின்னணி மற்றும் பெரிய பட்ஜெட் படங்கள் போட்டியில் இருப்பதால், படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள சுமார் 20-க்கும் மேற்பட்ட சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

தனுஷ், ஜெனிலியா நடிப்பில் உருவாகியுள்ள "உத்தமபுத்திரன்', பிரபுசாலமன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடித்துள்ள "மைனா', அர்ஜுன், ஹரிப்பிரியா நடித்துள்ள "வல்லக்கோட்டை', புஷ்கர் - காயத்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள "வ-குவாட்டர் கட்டிங்' ஆகிய படங்கள் ரிலீசாகின்றன. இவைகளைத் தவிர "ஸ்டிரீட் டான்ஸ்' என்ற முப்பரிமாண ஆங்கிலப் படத்தின் தமிழாக்கமும் வெளியாகிறது.

"உத்தமபுத்திரன்' படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடுவதாக முதலில் பேசப்பட்டது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சன் பிக்சர்ஸின் முதன்மை செயல் அதிகாரி சக்úஸனா பேசும்போதுகூட, இப்படத்தை சன் பிக்சர்ஸ் வெளியிடுவதாக அறிவித்தார். அதன் பின் இது தொடர்பான பேச்சுகள் எழவில்லை.

÷"எந்திரன்' படத்தை பிரபலப்படுத்தும் வேலையில் இன்னும் கவனம் செலுத்தி வருவதால் "உத்தமபுத்திரன்' பேச்சு அப்படியே நின்று போனதாகக் கூறப்படுகிறது. இப்போது இந்தப் படம் சுமார் 600 திரையரங்குகளில் ரிலீசாகிறது.

"மைனா' படத்தைத் திரையிடும் உரிமையை உதயநிதி ஸ்டாலின் பெற்றுள்ளார். பிரபுசாலமன் இயக்கியுள்ள இப்படத்தில் புதுமுகம் விதார்த், "சிந்து சமவெளி' படத்தில் நடித்த அமலாபால் ஆகியோர் நடித்துள்ளனர். 170 திரையரங்குகளில் இந்தப் படம் ரிலீஸ் செய்யப்படுகிறது.

"வ-குவாட்டர் கட்டிங்' படத்தை தயாநிதி அழகிரி விநியோகம் செய்கிறார். ஒய் நாட் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், புஷ்கர் - காயத்ரி தம்பதி இந்தப் படத்தை இயக்கியுள்ளனர். "மிர்ச்சி' சிவா, லேகா வாஷிங்டன் நடித்துள்ளனர். 150 திரையரங்குகளில் இந்தப் படம் திரையிடப்படுகிறது.

÷ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் அர்ஜுன், ஹரிப்பிரியா நடித்துள்ள வல்லக்கோட்டை 180 திரையரங்குகளில் திரையிடப்படுகிறது.

source : Dinamani