|
நம்மூர் தியேட்டர், பஸ்களை மிஞ்சுகிறது நியூயார்க் நகர் Nov 1, 10 |
|
நம்மூர் தியேட்டர்கள், பஸ்கள் போன்றவற்றில் மூட்டைப் பூச்சி இருப்பதை நாம் கண்டு கொள்வதில்லை. ஆனால், சமீப காலமாக அமெரிக்காவின் நியூயார்க் நகரில் மூட்டைப் பூச்சி திடீரென பெருகி வருவதால், அங்கு வருவதாகத் திட்டமிட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணத்தை ரத்து செய்து விட்டனர்.அமெரிக்கத் தலைநகரான நியூயார்க் நகரம், உலகளவில் சுற்றுலாவுக்குப் பெயர் பெற்றது.
அங்கு சமீப காலமாக பிரபலமான இடங்களில் மூட்டைப் பூச்சிகள் அதிக எண்ணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால், அந்நகர நிர்வாகம் தற்போது பீதியில் இருக்கிறது.நியூயார்க் நகரம், சுற்றுலா மூலம், ஆண்டுக்கு ஒரு லட்சத்து 44 ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதிக்கிறது. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், ஒவ்வோர் ஆண்டின் இறுதியிலும் லட்சக்கணக்கான மக்கள் நியூயார்க்குக்கு வந்து, நாள் கணக்கில் தங்கியிருப்பர்.தற்போது நகரின் முக்கிய இடங்களான, எம்பயர் ஸ்டேட் கட்டடம், பல்பொருள் அங்காடியான ப்ளூமிங்டேல்ஸ் மற்றும் கலைகளுக்குப் பெயர் பெற்ற லிங்கன் மையம் போன்றவற்றில் மூட்டைப் பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டதாக செய்திகள் வந்தன.
அதனால், நியூயார்க் நகருக்கு வருவதாகத் திட்டமிட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் தங்கள் திட்டத்தை ரத்து செய்து விட்டனர்.சுற்றுலா இணையதளம் நடத்தி வரும், "ட்ரிப் அட்வைசர்,' சுற்றுலாப் பயணிகளிடம் மூட்டைப் பூச்சிகள் பற்றி கேட்டுள்ளனர். அவர்கள் நடத்திய ஆய்வின் படி, நகரில் 12 சதவீதம் மூட்டைப் பூச்சிகள் அதிகரித்துள்ளதாக, "ட்ரிப் அட்வைசர்' கூறியுள்ளது.நகரின் பிரபல சுற்றுலா ஏஜென்சியான, "என்.ஒய்.சி., அண்டு கம்பெனி' பெரிய அளவில் சுற்றுலாப் பயணிகள் தங்கள் திட்டத்தை ரத்து செய்யவில்லை என்று தெரிவித்துள்ளது. நகர நிர்வாகமும் இந்த ரத்து செய்திகளை மறுத்துள்ளது.
source : Dinamalar |
|
|
|
|
|