Nagaratharonline.com
 
நகரத்தார் மகளிர் சங்கம் இணைந்து நடத்திய சமையல் போட்டி  Nov 3, 10
 
புதுக்கோட்டையில் தீபாவளிக் கொண்டாட்ட சமையல் போட்டி அண்மையில் நடைபெற்றது.

மகாராணி ரோட்டரி சங்கம், நகரத்தார் மகளிர் சங்கம், பிரின்ஸ் ரோட்டரி சங்கம் ஆகியவை இணைந்து நடத்திய இந்தப் போட்டியில் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்றனர். ஆரோக்கியம் மற்றும் ருசியுடன் கூடிய தரமான உணவு என்ற அளவுகோலை அடிப்படையாகக்கொண்டு நடைபெற்ற இந்தப் போட்டியில், சிறந்த உணவு வகைகளை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற "தமிழ்நாடு பேக்கரி பெடரேஷன்' அமைப்பின் தலைவர் சீனுசின்னப்பா தேர்ந்தெடுத்தார்.

சேதுசொக்கலிங்கம், சேனச்சி அண்ணாமலை,விசாலாட்சி தியாகராஜன் ஆகியோர் முறையே முதல் மூன்று பரிசுகளை வென்றனர். நாச்சம்மை சுந்தரம் ஆறுதல் பரிசை வென்றார். வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்புப் பரிசுகளும் பங்கேற்ற அனைவருக்கும் ஊக்கப்பரிசுகளும் அளிக்கப்பட்டன.

நிகழ்ச்சியை மகாராணி ரோட்டரி சங்கத் தலைவர் வள்ளியம்மை சுப்பிரமணியன் தொகுத்தளித்தார். நகரத்தார் மகளிர் சங்கத் தலைவர் மு. வள்ளிக்கண்ணு வரவேற்றார். பிரின்ஸ் ரோட்டரி சங்கத் தலைவர் மீனாவைரவன் நன்றி கூறினார்.


source : Dinamani