|
முத்திரைத்தாள் விற்பனையாளர்பணிக்கு விண்ணப்பிக்கலாம் Nov 7, 10 |
|
:சிவகங்கை, காரைக்குடி பதிவு மாவட்ட சார் பதிவாளர் அலுவலகங்களில், முத்திரைத்தாள் விற்பனையாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். சிவகங்கை, இளையான்குடி, பரமக்குடி, காளையார்கோவில், மதகுபட்டி, மானாமதுரை, திருப்புவனம், நயினார்கோயில், அறந்தாங்கி, பொன்னமராவதி சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன.
இவற்றில் 38 முத்திரைத்தாள் விற்பனையாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளன. விண்ணப்பத்துடன் கல்வி, வயது, நன்னடத்தை, பத்திர பதிவு துறை முன் அனுபவம் குறித்த சான்றுகள் அனுப்பவேண்டும். விண்ணப்பத்தை, சிவகங்கை மாவட்டத்தினர், "மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) 1-ஏ.,திருப்புத்தூர் ரோடு, சிவகங்கை - 630 561' க்கும்; காரைக்குடியை சேர்ந்தவர்கள், "மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்), முத்து ஊரணி வடக்கு, முத்துப்பட்டணம், காரைக்குடி' என்ற முகவரிக்கு, வரும் 22ம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பவேண்டும்
source : Dinamalar |
|
|
|
|
|