|
குன்றக்குடியில் கந்த சஷ்டி தொடக்கம் Nov 9, 10 |
|
காரைக்குடி, நவ. 7: சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி அருள்மிகு சண்முகநாதப் பெருமான் கோயிலிலில் சனிக்கிழமை கந்த சஷ்டி விழா தொடங்கியது. விழாவை யொட்டி லட்சார்ச்சனை நடைபெற்று வருகிறது.
குன்றக்குடி திருவண்ணாமலை ஆதீனம் ஆளுகைக்குள்பட்ட இக்கோயிலில் ஆண்டு தோறும் கந்தசஷ்டி விழா நடைபெற்று வருகிறது.
இந்த ஆண்டு சனிக்கிழமை முதல் 6 நாள்களுக்கு பல்வேறு வடிவங்களில் சூரபத்மன் எழுந்தருளலும். சூரபத்மனை சுவாமி எதிர்கொள்ளல் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.
ஞாயிற்றுக்கிழமை அருள்மிகு சண்முகநாதப்பெருமான் மூலவர் ராஜ அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில் பரம்பரை அறங்காவலர் குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், முக்கிய பிரமுகர்கள், பக்தர்கள் கலந்துகொண்டனர்
Source:Dinamani |
|
|
|
|
|