|
மதகுபட்டியில் ஆக்கிரமிப்பு அமோகம் Nov 24, 10 |
|
ஆக்கிரமிப்பு, சுகாதாரக்கேட்டில் சிக்கி மதகுபட்டி மக்கள் தவிக்கின்றனர். சுற்றியுள்ள 50 க்கும் மேற்பட்ட கிராமத்தினர், பொருட்கள் வாங்குதல் போன்ற அன்றாட தேவைகளுக்காக இங்கு வந்து செல்கின்றனர். பட்டமங்கலம், கண்டுப்பட்டி, நாட்டரசன்கோட்டை தலங்களுக்கு இதன் வழி செல்ல வேண்டும். இங்கு பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் ஆக்கிரமிப்பு கடைகள் உள்ளதால், பயணிகள் நிற்க இடம் இல்லாமல் அவதிப்படுகின்றனர். ஏற்கனவே அகற்றப்பட்ட ஆக்கிரமிப்புகள் மீண்டும் பெருகிவிட்டதால், பஸ் ஸ்டாண்ட் எதிரே அலங்கோலமாக காணப்படுகிறது. இறைச்சி கடை, ஓட்டல் கழிவுகள் பஸ் ஸ்டாண்டை சுற்றிலும் கொட்டப்படுவதால் தொற்றுநோய் அபயம் உள்ளது. எங்கு பார்த்தாலும் பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகின்றன. இந்த அவலங்களை போக்க ஊராட்சியினர் நடவடிக்கை எடுக்கவில்லை. இங்கு சுகாதாரத்தை சீரமைக்க கலெக்டர் சம்பத் நடவடிக்கை எடுக்க வேண்டும்
source : Dinamalar |
|
|
|
|
|