|
கணக்கில்லாத ஏடிஎம்-ல் பணம் எடுக்க நிபந்தனை Oct 15, 09 |
|
சென்னை, அக். 15: வங்கிக் கணக்கு வைத்துள்ளோர் தங்களது ஏடிஎம் கார்டைப் பயன்படுத்தி, மற்ற வங்கிகளின் ஏடிஎம்-ல் பணம் எடுக்க இந்திய ரிசர்வ் வங்கி நிபந்தனை விதித்துள்ளது.
தினமும் குறைந்த அளவு பணத்தை தொடர்ந்து மாதம் முழுவதும் மற்ற வங்கி ஏடிஎம் - ல் ஒருவர் எடுக்கும் நிலையில், நிர்வாக ரீதியில் வாடிக்கையாளர் கணக்கு வைத்துள்ள வங்கிகளுக்கு ஏற்படும் செலவைக் குறைக்கும் வகையில் புதிய நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டு அமலுக்கு வந்துள்ளன.
அதன்படி இனி 5 தடவை மட்டுமே ஒருவர் பிற வங்கி ஏடிஎம் - ல் பணம் எடுக்க முடியும். 5-வது தடவைக்கு மேல் மற்ற வங்கி ஏடிஎம் - ல் பணம் எடுக்கும் நிலையில், வாடிக்கையாளருக்கு சேவை வரி விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தச் சேவை வரி அவரது வங்கிக் கணக்கு தொகையிலிருந்து தன்னிச்சையாக கழிக்கப்படும். சேவை வரி எவ்வளவு என்பதை வங்கி நிர்வாகங்கள் விரைவில் முடிவு செய்து அறிவிக்க உள்ளன.
மேலும் பிற வங்கி ஏடிஎம்-ல் ஒரு தடவையில் அதிகபட்சம் ரூ.10 ஆயிரத்தை மட்டுமே வாடிக்கையாளர் எடுக்க முடியும்
source : Dinamani 16/10/09 |
|
|
|
|
|