Nagaratharonline.com
 
கண்டரமாணிக்கத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வலியுறுத்தல்  Nov 29, 10
 
திருப்பத்தூர், நவ. 28: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கத்தில் போதிய பஸ் வசதி இல்லாததால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் பரிதவித்து வருகின்றனர்.

கல்லல் ஒன்றியம், கண்டரமாணிக்கத்தைச் சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இங்குள்ள கிராம மாணவ, மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்குச்ó செல்ல திருப்பத்தூர் வருகின்றனர்.
காலையில் இயக்கப்படும் பஸ்கள் அனைத்திலும் படிக்கட்டில் தொங்கிக்கொண்டு செல்லும் அளவுக்கு பயணிகள் கூட்டம் உள்ளது.

மேலும் திருப்பத்தூரிலிருந்து இரவு 7 மணிக்கு மேல் கண்டரமாணிக்கம் வழித்தடத்துக்கு பஸ் கிடையாது. இதனால் இப் பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாக நேரிடுகிறது. இப் பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் காலை 8.30 மணிக்கும், இரவு 9 மணிக்கும் கண்டரமாணிக்கத்துக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும். மதியம் 1 மணி, இரவு 8.45 மணிக்கு இயங்கி வந்த தனியார் பஸ் போக்குவரத்து தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து கண்டரமாணிக்கம்

ஊராட்சி மன்றத் தலைவர் சோலை நாராயணன் கூறுகையில், இப்பகுதி மக்கள் போதிய பஸ் வசதி இல்லாமல் சிரமப்படுகின்றனர். காலை 8.30 மற்றும் இரவு 8.30 மணிக்கு கூடுதல் பஸ்களை இயக்க, போக்குவரத்துத் துறையினரிடம் மனு அளித்தோம். ஆனால் நடவடிக்கை இல்லை என்றார்.

source : Dinamani