Nagaratharonline.com
 
NRI Quota : அரசு உத்தரவை மீறிய 18 இன்ஜி., கல்லூரிகளுக்கு அபராதம்  Nov 30, 10
 
அரசு உத்தரவுக்கு முரணாக வெளிநாடு வாழ் இந்தியர் பிரிவில், மாணவர்களை சேர்த்த 18 பொறியியல் கல்லூரிகள் தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் செலுத்த மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.பொறியியல் கல்லூரிகளில் வெளிநாடுகளில் வாழ் இந்தியர் பிரிவில் அவர்களின் நேரடி வாரிசுகளை மட்டும் சேர்க்க அரசு ஏற்கனவே உத்தரவிட்டது. சில கல்லூரிகளில் வெளிநாடுகளில் வசிப்பவர்களின் நேரடி வாரிசு அல்லாதவர்களும் சேர்க்கப்பட்டனர். மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை, குமரி, திருச்சி மாவட்ட பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்கள் தேர்வு எழுத அண்ணா பல்கலை அனுமதி மறுத்தது.
இதை எதிர்த்து 42 பேர் ரிட் மனுக்களை தாக்கல் செய்தனர்


முடிவில் நீதிபதி, ""அரசு உத்தரவை ரத்து செய்ய முடியாது. கல்லூரிகள் பணத்தை நோக்கமாக கொண்டு மாணவர்களை சேர்த்துள்ளனர். மாணவர்கள் இரு ஆண்டுகள் படிப்பை தொடர்ந்து உள்ளனர். அவர்கள் படிப்பை தொடரலாம். அரசு உத்தரவை மீறி, மாணவர்களை சேர்த்ததற்காக கல்லூரி நிர்வாகங்கள் தலா ஒரு லட்சம் ரூபாய் அரசுக்கு அபராதம் செலுத்த வேண்டும். எதிர்காலத்தில் அரசு உத்தரவை மீறும் கல்லூரிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய அரசு, தொழில்நுட்ப கல்வி இயக்குனர், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கழகம் மற்றும் பல்கலைகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.


source : Dinamalar