Nagaratharonline.com
 
சர்க்கரை நோயால் சிறுநீரகம் பாதிப்பும், செயலிழப்பும்  Dec 2, 10
 
சர்க்கரை வியாதி ஏற்பட்டால் பாதிப்பிற்கு உள்ளாகிற முதல் உறுப்பு சிறுநீரகம்தான். எப்படியென்றால், முதலாவதாக இரத்தம் சுத்திகரிக்கப்படும் போது சிறுநீரகத்தில் இருந்து மிகக் குறைந்த அளவே புரதச்சத்து வெளியேறும். இதனால் உடல் சமச்சீர் நிலை குறையும். இதை துவக்க நிலையில் கண்டறிந்தால் மைக்ரோ ஆல்புமின் பரிசோதனையில் கண்டறிந்து குணப்படுத்திவிடலாம்.

சிறுநீரில் புரதச்சத்து அதிகமாக வெளியேறுவதால் அடிக்கடி சிறுநீர் பிரியும். மிகை இரத்த அழுத்தம் ஏற்பட்டு பிற உறுப்புகளும் பாதிக்கப்படலாம். சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு ஏழு ஆண்டுகளில் இந்த நிலை வெளியே தெரியவரும். இதைத் தொடர்ந்து சிறுநீரில் அதிகமான புரதம் வெளியேறிவிடுவதால் உடல் பருத்தும், கைகால்கள் வீங்கியும் காணப்படும்.

கடைசி நிலையாக சிறுநீரகம் செயலிழந்துவிடும். சர்க்கரையால் பாதிக்கப்பட்ட நபர், இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொண்டு, சிறுநீரகத்திற்கும் சரியான சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் அடுத்த பத்து ஆண்டுகளில் அவரது சிறுநீரகம் செயலிழந்துவிடும்.


source : Webdunia