Nagaratharonline.com
 
பாகனேரி : இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை திறப்பு  Dec 5, 10
 
.இங்கு, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை திறப்பு விழா நடந்தது.வங்கி தலைவர் நரேந்திரா தலைமை வகித்தார்.முதன்மை மண்டல மேலாளர் ராமதாஸ் வரவேற்றார். கிளையை திறந்து அமைச்சர் சிதம்பரம் பேசுகையில், 2008ல் உலகப் பொருளாதாரம் வீழ்ந்த போதும், நம் நாட்டில் நமக்கு இருந்த பலத்தின் காரணமாகவும், மக்களின் தெளிவு, அரசும் நிர்வாக கட்டுப்பாட்டுடன் செயல்பட்டதால், இங்கு எந்த பாதிப்பும் இல்லை. பின்தங்கிய பகுதி என்ற எண்ணம் இன்றி தன்னார்வம், தன்னம்பிக்கையுடன் செயலாற்றினால் முன்னேற்றம் நிச்சயம். நமக்குள்ளே பிளவு படுத்துகின்ற சக்திகளை ஒதுக்கிவிட்டு, முன்னேற்றம் காணவேண்டும் என்றார்.


source : Dinamalar