|
பொன்னமராவதியில் மழை சேதம்: திருமயம் எம்எல்ஏ பார்வையிட்டார் Dec 7, 10 |
|
புதுக்கோட்டை, டிச. 6: புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி பகுதியில் தற்போது பெய்து வரும் மழையால் சேதமடைந்த பகுதிகளை திருமயம் சட்டப்பேரவை உறுப்பினர் ராமசுப்புராம் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.
பொன்னமராவதி பகுதியில் பலத்த மழையில் சேதமடைந்த பாப்பாயிஆச்சி அரசு மருத்துவமனை செல்லும் சாலை, அண்ணா சாலை, வலையபட்டி சாலைகளையும், கொப்பனாபட்டி, தேனூர், ஏம்பல்பட்டி, சுப்புராயபட்டி, இடையாத்தூர், புலவனார்குடி, மரவாமதுரை, சடையம்பட்டி, உடையாம்பட்டி, சங்கம்பட்டி ஆகிய பகுதிகளில் மழையினால் ஏற்பட்டுள்ள பயிர் சேதங்கள் மற்றும் சாலைகளையும் அவர் பார்வையிட்டார்.
பின்னர், வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் நிவாரப் பணிகளை முழுவீச்சில் மேற்கொள்ளுமாறு வட்டாட்சியர் பாஸ்கரிடம் அறிவுறுத்தினார். பொன்னமராவதி வட்டத்தில் இதுவரை 40 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், 7 கால்நடைகள் இறந்துள்ளதாகவும் வட்டாட்சியர் கூறினார்.
இதுகுறித்து சட்டப்பேரவை உறுப்பினர் ராமசுப்புராம் தெரிவித்தது: பொன்னமராவதி பகுதியில் அதிக அளவில் சாலைகள் சேதமடைந்துள்ளன. ஏற்கெனவே திருமயம், அரிமளம் ஆகிய ஒன்றியங்களில் வெள்ளத்தால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டேன்.
தற்போது திருமயம் தொகுதியில் பெய்த தொடர் மழையால் ஏற்பட்டுள்ள சேதங்களை தமிழக முதல்வர், மாவட்ட ஆட்சியர் ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் ராம. சுப்புராம் தெரிவித்தார்.
அப்போது வட்டாரக் காங்கிரஸ் தலைவர் சுப. ராஜேந்திரன், ஊராட்சித்தலைவர்கள் ராமச்சந்திரன், அழகு, நகரத் தலைவர் சோமசுந்தரம் ஆகியோர் உடனிருந்தனர்.
Source:Dinamani |
|
|
|
|
|