|
உலகமெங்கும் பிள்ளையார் நோன்பு விழா Dec 11, 10 |
|
நகரத்தாரின் சிறப்பு மிக்க விழாவாக, பிள்ளையார் நோன்பு , நேற்று உலகமெங்கும் நகரத்தார்கள் வசிக்கும் பகுதிகளில் விமரிசையாக கொண்டாடப்பட்டது. நகரத்தார்கள் அனைவரும் முழுமுதற்கடவுள் பிள்ளையாரை வழிபட்டு, இழை எடுத்து , இறைஅருள் பெற்றனர்.
தமிழகத்தில் வைரவன்பட்டி நகர விடுதி, திருப்பூர் (திருப்பூர் நகரத்தார் சங்கம்) ,திருச்சி - 1 (ஸ்ரீ கற்பகவிநாயகர் சங்கம்),திருச்சி - 2 , (திருச்சி நகரத்தார் சங்கம்), பொள்ளாச்சி (பொள்ளாச்சி நகரத்தார் சங்கம்), மதகுபட்டி (மதகுபட்டி)நகரத்தார்கள்) , சேலம் ( சேலம் நகரத்தார் சங்கம்), ராணிபேட்டை (நகரத்தார் நல சங்கம்), கோவை (நகரத்தார் சங்கம்), சென்னை மண்ணடி நகர விடுதி, திருவான்மியூர் (நகரத்தார் மன்றம்) ஆகிய ஊர்களில் பிள்ளையார் நோன்பு கொண்டாடப்பட்டது.
மேலும் அமெரிக்காவில் Detroit, MI, Washington DC, Indianapolis, IN, Columbus OH, Bay Area, CA , Austin, TX, Arizona, AZ, NY, NJ and CT Regions, Atlanta, GA , Chicago, IL, Missouri, MO , Philadelphia, PA, North Carolina, NC பகுதிகளில் கொண்டாடப்பட்டது.
பஹ்ரைன், சிங்கப்பூர், மலேசியா, கனடா, துபாய் மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வாழும் நகரத்தார்கள் பிள்ளையார் நோன்பு வழிபாடு செய்தனர். |
|
|
|
|
|