|
வருகிறாள் மார்கழி மங்கை Dec 14, 10 |
|
மார்கழி குளிரில் வாசலை அலங்கரிக்கும் வண்ண கோலப்பொடி விற்பனை களைகட்டியுள்ளது.
"வாசலிலே மாக்கோலம்... வீட்டினிலே லட்சுமிகரம்' என்ற பாடல் வரிக்கேற்ப மார்கழி பிறந்த உடன், பெண்கள் பல வண்ணங்களில் கோலம் இடுவர்.
அதன் நடுவே சானத்தை பிள்ளையார்போல் பிடித்து, பூசணிப்பூ வைத்து,
ஐஸ்வர்ய லட்சுமியை வரவேற்பர். இதற்காக, உடலை உலுக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல், அதிகாலை 4 மணிக்கெல்லாம் கோலக்களத்தில் குதித்து விடுவர்.ஜரூர்: மார்கழி மங்ககையின் வருகைக்காக, கலர் கோலப்பொடிகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. சிவகங்கை, மானாமதுரையை சேர்ந்த வியாபாரிகள் வெள்ளை பொடியுடன் வண்ணம், ஆற்று மணலை கலந்து இதை தயாரிக்கின்றனர். இங்கு 15 வகையான கலரில் பொடி தயாராகிறது. இவற்றை பாக்கெட்டில் அடைத்து, விற்கின்றனர். இதன் விலை ஒரு ரூபாய்.
source : Dinamalar |
|
|
|
|
|