|
திருப்புத்தூரில் ஒரே வளாகத்தில் இரு துவக்கப்பள்ளிகள் Dec 14, 10 |
|
திருப்புத்தூரில் ஒரே வளாகத்தில் இரு துவக்கப்பள்ளிகள் செயல்படுகின்றன. இதில் ஒரு பள்ளி மூடப்படும் நிலையில் தள்ளாடுகிறது. கீழரத வீதி, நாகப்பா மருதப்பா துவக்கப்பள்ளிகள், 10 ஆண்டுகளுக்கு முன் இரு வேறு இடங்களில் இயங்கி வந்தன. நா.ம.பள்ளி செயல்பட்ட இடம் தனியாருடையது என்ற சர்ச்சையால், சாம்பாண் ஊரணி கரையில் உள்ள கீழரத வீதி துவக்கப்பள்ளி வளாகத்திற்கு மாற்றப்பட்டது.
கடந்த 10 ஆண்டுகளாக ஒரே வளாகத்தில் இரு பள்ளிகளும் செயல்படுகின்றன.கீழரத வீதி பள்ளியில் 25; நா.ம.பள்ளியில் மூன்று மாணவர்களும் படிக்கின்றனர். இவர்களுக்கு இரு தலைமை ஆசிரியர், இரு ஆசிரியர்கள் உள்ளனர். அடுத்த ஆண்டில் நா.ம.பள்ளியில் மாணவர்கள் இருப்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் இப்பள்ளியின் வேறு பள்ளியோடு இணைக்கப்படலாம்.நகரில் பள்ளி இல்லாத இடம் தேர்வு செய்து, அங்கு நா.ம.பள்ளியை இடம் மாற்றுவது அவசியம். தங்கள் அலுவலகத்திற்கே நிலையான இடம் இல்லாமல் தடுமாறும், உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள், இப்பிரச்னைக்கு தீர்வு காண்பார்களா என்பது சந்தேகமே. இப்பிரச்னையில் அமைச்சர் பெரியகருப்பன் தலையிட்டு, பள்ளிக்கு புத்துயிர் ஊட்ட வேண்டும்.
source : Dinamalar |
|
|
|
|
|