Nagaratharonline.com
 
வருகிறது "111111' பொதுமக்களே உஷார்  Dec 18, 10
 
அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் நவம்பர் மாதங்களில், வர்த்தகம் மற்றும் அலுவலக விவகாரங்களில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். அடுத்த ஆண்டு, அதாவது "2011' யை சுருக்கமாக "11'என குறிப்பிட உள்ளனர்.

முதல் மாதமான ஜனவரி 1ம் தேதியை சுருக்கமாக "1.1.11' என குறிப்பிடுவர். இது மட்டும் இருந்தால் குழப்பம் வராது.அதே ஜனவரி 11ம் தேதி அன்றும், "11.1.11' என வரும். நவம்பர் மாதமும் இது போன்ற ஒரு குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.அதாவது, 11ம் மாதமான நவம்பர் 1ம் தேதியை, "1.11.11' என குறிப்பிட வேண்டி வரும். அதே நவம்பர் மாதம் 11ம் தேதியை "11.11.11' என குறிப்பிடுவர்.ஆக, அடுத்த ஆண்டு "1' என்ற எண், இப்படியெல்லாம் பல விதங்களில் நமது "வாழ்க்கையோடு' விளையாட உள்ளது. இந்த தேதிகளை குறிப்பிடும்போது, எண்களுக்கு இடையேயான புள்ளியை சரியாக வைக்காவிட்டாலோ, மாற்றி வைத்து விட்டாலோ, தேதியும் மாதமும் மாறி விடும்.

எனவே தேதி குறிப்பிட்டு "ரசீது' பெறுவோர், கணக்கு எழுதுவோர் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பல குழப்பங்களை சந்திக்க வேண்டி வரும்.


source : Dinamalar