|
ரேஷன் கார்டு இணைப்பு தாள் : நிபந்தனை தளர்வு Dec 23, 10 |
|
ரேஷன் கார்டுக்கான கூடுதல் இணைப்பு தாள் பெறும் விதிமுறைகளை, அரசு தளர்த்தியுள்ளது.
ரேஷனில் பொருள் வாங்க கார்டுகளில், இம்மாதம் வரை மட்டுமே தாள் இணைக்கப்பட்டிருந்தது. புதுப்பிக்கப்பட்ட கார்டு வழங்குவதற்கு பதில், அடுத்த ஆண்டுக்கான இணைப்பு தாள் மட்டும் இணைக்க, அரசு உத்தரவிட்டுள்ளது. விதிமுறை: இதன்படி, கடந்த 20 ம் தேதி முதல் ரேஷன் கடைகளில் இணைப்பு தாள் வழங்கப்படுகிறது. "இதை வாங்க குடும்ப தலைவர் நேரடியாக வரவேண்டும். முடியாத பட்சத்தில், குடும்ப உறுப்பினர்கள், தலைவரின் ஒப்புதல் சான்றுடன் வந்தால் மட்டுமே இணைப்பு தாள் தரப்படும்' என உத்தரவிடப்பட்டது.
தளர்வு: இந்த நிபந்தனைகள் திடீரென தளர்த்தப்பட்டுள்ளன. "ரேஷன் கார்டு கொண்டு வருபவர் யாராக இருந்தாலும், கையெழுத்து பெற்று, இணைப்பு தாள் வழங்கலாம்,' என மாவட்ட வழங்கல் அலுவலர்களுக்கு, அரசு உத்தரவிட்டுள்ளது. கார்டுதாரர்கள் வரும் 31 ம் தேதிக்குள் இணைப்பு தாளை பெற்றால் மட்டுமே அடுத்த ஆண்டிற்கான பொருட்களை வாங்க முடியும்
source : Dinamalar |
|
|
|
|
|