Nagaratharonline.com
 
சபரிமலை சரங்குத்தியில் பக்தர்கள் குடிநீரின்றி 6 மணிநேரம் தவிப்பு  Dec 23, 10
 
சரங்குத்தியில் பக்தர்கள் குடிநீரின்றி 6 மணிநேரம் தவித்தனர்.

சபரிமலைக்கு பக்தர்கள் வருகை அதிகரித்து வருகிறது. சுவாமி தரிசனம் செய்ய 10 மணி நேரம் ஆகிறது. இதில் சரங்குத்தியை அடுத்து சந்நதி வரை எந்தவிதமான அடிப்படை வசதியும் செய்யப்படவில்லை.

பக்தர்கள் பம்பையில் இருந்து சந்நதி வரும் போது சரங்குத்தியில் சுமார் 6 மணிநேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. குடிநீரில்லாத காரணத்தினால் பக்தர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் ஐயப்ப சேவா சங்கம் மூலம் 6 மணி நேரம் கழித்து குடிநீர் வழங்கபட்டது.

source : Dinamani