|
திருமலையில் விரைவு தரிசனத்துக்கு ரூ.300: இன்று முதல் அமல் Oct 20, 09 |
|
திருப்பதி, அக். 20: திருமலையில் வெங்கடேசப் பெருமாளை விரைந்து தரிசிக்க ரூ.300 கட்டண முறை புதன்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.
"சீக்கிர தரிசனம்' என பெயரிடப்பட்டுள்ள இந்த புதிய தரிசனம் சோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தான மக்கள் தொடர்பு அதிகாரி டி.ரவி, செவ்வாய்க்கிழமை செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:
பக்தர்கள் நீண்டநேரம் காத்திராமல் பெருமாளை விரைந்து தரிசனம் செய்யவும், இடைத்தரகர்களைத் தவிர்க்கவும், முக்கியப் பிரமுகர்களின் பரிந்துரைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும் இந்த புதிய கட்டண முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஒருவருக்கு ரூ.300 கட்டணம் என்ற வகையில் வைகுண்டம் வளாகத்தில் தங்குதடையின்றி டிக்கெட் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அமலில் உள்ள இலவச தரிசனம் மற்றும் ரூ.50 கட்டண தரிசனம் தொடரும். அதேசமயம் ரூ. 100 மற்றும் ரூ.200 கட்டணத்துக்குரிய அர்ச்சனானந்தர தரிசனம் ஆகியவை உடனடியாக ரத்து செய்யப்படுகிறது.
source : Dinamani 20/10/09 |
|
|
|
|
|