|
வடபழனி கோவிலில் புத்தாண்டு சிறப்பு தரிசன ஏற்பாடுகள் Dec 28, 10 |
|
புத்தாண்டு தினத்தன்று, வடபழனி முருகனை சிறப்பு தரிசனம் செய்யும் பக்தர்களின் வசதிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.சென்னை வடபழனி முருகன் கோவிலில், புத்தாண்டையொட்டி ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகனை தரிசிக்க கூடுகின்றனர். அவர்களின் வசதிக்காக முருகனை தரிசனம் செய்யவும், அர்ச்சனை செய்யவும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கோவிலின் தெற்கு கோபுர வாயிலில் இரண்டு வகை வரிசைகள் கட்டப்பட்டுள்ளன.அன்றைய தினம் அதிகாலை முதலே ஒன்றில் தர்ம தரிசனமும், மற்றொன்றில் 20 ரூபாய் கட்டண தரிசனமும் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 50 ரூபாய் கட்டணம் செலுத்தி மேற்கு கோபுரம் வழியாக, எளிதாக முருகனை வழிபடவும் வசதி செய்யப்பட்டுள்ளது.அன்றைய தினம் முருகனுக்கு சிறப்பு அலங்காரமும், மதியம் 1 மணி முதல் மாலை 4 மணி வரை தங்க கவச அலங்காரமும், மாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை புஷ்ப அங்கி அலங்காரமும் நடைபெறவுள்ளது
புத்தாண்டையொட்டி, அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் சிவசிதம்பரம், துணை ஆணையர் காவேரி உள்ளிட்டோர் செய்து வருகின்றனர் |
|
|
|
|
|