|
கொன்னையூர் கோயில் கோபுரத்திலிருந்து தவறி விழுந்து பள்ளி மாணவர் சாவு Dec 28, 10 |
|
பொன்னமராவதி அருகேயுள்ள கொன்னையூர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் கோபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை மின் விளக்கு அமைப்பதற்காக ஏறிய பள்ளி மாணவர் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து உயிரிழந்தார்.
பொன்னமராவதி அருகேயுள்ள வலையபட்டியைச் சேர்ந்த அடைக்கப்பன் மகன் செல்வம்(16).
பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைப் பள்ளியில் எஸ்எஸ்எல்சி படித்துவந்த இவர் பள்ளி விடுமுறை நாள்களில் அப்பகுதியில் உள்ள ஒலிபெருக்கி அமைப்பாளரிடம் பகுதிநேரப் பணியாற்றுவது வழக்கமாம்.
இந்நிலையில், கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் திருக்கோயில் கோபுரத்தில் ஞாயிற்றுக்கிழமை அலங்கார மின் விளக்குகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த செல்வம் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்ததில் அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து பொன்னமராவதி போலீஸôர் விசாரித்துவருகின்றனர்.
source : Dinamani |
|
|
|
|
|