Nagaratharonline.com
 
திருமலையில் தங்கும் விடுதிகளில் ஜனவரி முதல் புதிய கட்டுப்பாடு  Dec 29, 10
 
திருமலையில் உள்ள விடுதிகளில் தங்க பக்தர்களுக்கு புத்தாண்டு முதல் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட உள்ளன.

திருமலைக்கு வரும் பக்தர்கள் தங்கி ஏழுமலையானை தரிசித்து செல்ல திருமலை திருப்பதி கோயிலுக்கு சொந்தமாக விடுதிகள் உள்ளன. இங்கு உள்ள விடுதிகளில் சிறிய, பெரிய அறைகள் என உள்ளன. இதில் தங்குவதற்கு நாளொன்றுக்கு ரூ. 50 முதல் 6 ஆயிரம் வரை வாடகை நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்படுகின்றன.

எனவே பக்தர்கள் யாருடைய பரிந்துரையும் இல்லாமல் நேரடியாக விடுதிகளில் தங்கி வந்தனர். இப்போது திருமலை திருப்பதி கோயில் நிர்வாகம் வரும் ஜனவரி 1 ஆம் தேதி முதல் மேலும் சில கட்டுப்பாடுகள் விதித்துள்ளது. அதாவது பக்தர்கள் விடுதி அறைகளில் தங்க அதிகபட்சமாக 48 மணி நேரம் வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

அதற்கு மேல் தங்கினால் 100 சதவிகிதம் வாடகை கூடுதலாக வசூல் செய்யப்படும். அதற்கு மேல் தங்க அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. திருமலைக்கு வரும் அனைத்துப் பக்தர்களுக்கும் தங்கும் வசதி கிடைக்கவே இந்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக திருமலை திருப்பதி கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது

source : Dinamani