|
அரசு அனுமதி பெறாத நிலங்களை வாங்கக் கூடாது: Dec 30, 10 |
|
சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கட்டட வரைபட அனுமதி, மனைப்பிரிவு ஒப்புதல், நிறுவன வரைபட ஒப்புதல் ஆகியவற்றைப் பெறுவதில் உள்ள குறைகளைக் கேட்டறியும் குறை தீர்வு முகாம் சிவகங்கையில் புதன்கிழமை நடைபெற்றது.
முன்பெல்லாம் பெரிய பரப்பளவிலான திட்டங்களுக்கு அனுமதி பெற சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தைத்தான் அணுக வேண்டும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது 2500 சதுர மீட்டர் (27 ஆயிரம் சதுர அடி) பரப்பளவிலான வணிக, குடியிருப்பு வளாகங்களுக்கு அந்தந்த மாவட்ட அலுவலகங்களிலேயே அனுமதி பெற முடியும். கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்களுக்கு இந்த அளவு கட்டுப்பாடுகள் இல்லை.
4 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான வீடுகளுக்கும், 2 ஆயிரம் சதுர அடி பரப்பளவிலான வணிக நிறுவனங்களுக்கும் அந்தந்த நகராட்சி, ஊராட்சி அமைப்புகளிலேயே அனுமதி பெறலாம்.
விண்ணப்பித்த 30 நாள்களுக்குள் அனைவருக்கும் கட்டட அனுமதி வழங்க வேண்டும் என்பதற்காகவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மனுதாரருக்கு குறிப்பிட்ட நாள்களுக்குள் அனுமதி கிடைக்கவில்லை என்றால், ஏன் கிடைக்கவில்லை என்ற தகவலையும், விண்ணப்பத்தில் ஏதாவது குறை இருந்தால் அதுகுறித்த தகவல்களையும் சான்று அஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்.
source : Dinamani |
|
|
|
|
|