|
சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி: பிப்.15ல் துவக்கம் Dec 31, 10 |
|
சட்டசபை தேர்தல் நெருங்குவதால், மருத்துவ கல்லூரியை பிப்., 15 ல் துவக்க, அரசு திட்டமிட்டுள்ளது.மாவட்ட மக்களின் நீண்ட நாள் எதிர்பார்ப்பான அரசு மருத்துவ கல்லூரிக்கு, கடந்த இரு ஆண்டுகளுக்கு முன் 97 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. தமிழக முதல்வர், 2009 பிப்ரவரியில் அடிக்கல் நாட்டினார்.இதில், 300 படுக்கை கொண்ட மருத்துவமனை, புற நோயாளிகள் பிரிவு, ரத்த வங்கி, ஆய்வுக்கூடம், நிர்வாக கட்டடம், நூலகம், 250 மாணவர்களுக்கான விடுதி, அலுவலர், பணியாளர் குடியிருப்பு, கலை அரங்கம் அடங்கும். தற்போது 70 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. மீத பணிகளுக்கு இன்னும் இரண்டு மாதம் ஆகலாம். பணிகளை ஆய்வு செய்த சுகாதார துறை செயலர் சுப்புராஜ், வரும் பிப்., 15 ல் மருத்துவ கல்லூரி திறக்கும் வகையில், ஏற்பாடுகளை முடிக்க உத்தரவிட்டுள்ளார். இதன்படி மருத்துவமனை, அவசர, உள்நோயாளிகள் பிரிவு மட்டும் முதல் கட்டமாக திறக்கப்படும்
source : Dinamalar |
|
|
|
|
|