Nagaratharonline.com
 
பொங்கல் பொருள்கள் நாளை முதல் விநியோகம்  Dec 31, 10
 
புதுக்கோட்டை, டிச. 30: நியாயவிலைக் கடைகள் மூலம் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஜனவரி 1-ம் தேதி முதல் பொங்கல் பொருள்கள் விநியோகிக்கப்படுகின்றன.

இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

""தைத் திங்கள் முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டு தமிழர் திருநாளாகக் கொண்டாடும் வகையில் பொங்கல் தயாரிக்க கீழ்கண்ட பொருள்களை ஒரு தனி பையிலிட்டு ஜனவரி 1 முதல் பொங்கல் பொருள்கள் (பச்சரிசி அரை கிலோ, வெல்லம் அரை கிலோ, பாசிப்பருப்பு 100 கிராம், முந்திரி பருப்பு 10 கிராம், உலர்ந்த திராட்சை 5 கிராம் மற்றும் ஏலக்காய் 5 கிராம்) ஆகியவற்றை வழங்க அரசு ஆணையிட்டுள்ளது. இதன்படி டிச. 31 அன்று நடைமுறையில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் (எப்பொருளும் வேண்டா குடும்ப அட்டைதாரர்கள் உள்பட) ஜன. 1 முதல் 14-ம் தேதி வரை - விடுமுறை நாள்கள் உள்பட - பொங்கல் பொருள்கள் வழங்கப்படுகின்றன. இந்த வாய்ப்பை குடும்ப அட்டைதாரர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.''


source : Dinamani