Nagaratharonline.com
 
ஓரிக்கை : ஸ்ரீ மஹா பெரியவர் மணி மண்டபம்: ஜனவரி 28 குடமுழுக்கு  Dec 31, 10
 
காஞ்சிபுரம், டிச. 30: காஞ்சிபுரம் ஓரிக்கையில் அமைக்கப்பட்டுள்ள ஸ்ரீ மஹா பெரியவர் மணி மண்டப குடமுழுக்கு விழா ஜனவரி 28-ம் தேதி நடைபெற உள்ளதாக ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தெரிவித்தார்.

ஸ்ரீ காமகோடி செய்தி மடலை வியாழக்கிழமை வெளியிட்ட பின் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

ஸ்ரீ மஹா பெரியவருக்கு ரூ. 10 கோடிக்கு மேற்பட்ட செலவில் பக்தர்களால் ஓரிக்கையில் கருங்கல்லால் ஆன மணி மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான முதற்கட்டப் பணிகள் முடிவுற்றுள்ளன. இதன் குடமுழுக்கு விழா நிகழ்ச்சிகள் ஜனவரி 9-ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகின்றன. ஜனவரி 28-ம் தேதி விமான மஹா கும்பாபிஷேகமும், மூல மூர்த்தி, மஹாபாதுகா அபிஷேகமும், இதைத் தொடர்ந்து மஹாபிஷேகமும் நடைபெற உள்ளன என்றார்.

source : Dinamani